கனிமொழி எம்பி 
தமிழக செய்திகள்

இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? - சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் கனிமொழி எம்பி வேதனை

முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டது என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

சென்னை,

இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? - சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் வேதனனை அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சரித்திர பதிவேடு குற்றவாளி

தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைநகரமா

இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதுவே சாட்சி

முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT