சென்னை,
இதுதான் சாமானியர்களுக்கான அரசா? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-
விண்ணை முட்டும் விலைவாசியும், உயரும் அரிசி விலையும் சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக சேலத்தில் தமிழக அரசு கூட்டுறவு அங்காடிகளில் குறைவான விலையில் அரிசி வழங்குவதாக கூறி இலவச ரேஷன் அரிசியையே மீண்டும் கொடுத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த கால திமுக ஆட்சிக்கு நாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் தவெக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கான அரசாக அல்லாமல் பொதுமக்களை வாட்டி வதைக்கும் அரசாக செயல்பட்டு கொண்டிருப்பது இந்த அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகிறது.
மீண்டும் கூறுகிறேன்! இது மக்களுக்கான மாற்றம் தரும் அரசு அல்ல! ஏமாற்றம் தரும் அரசு.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.