சென்னை,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையில் எப்.சி. - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் எட்மண்ட் லால்ரிண்டிகா ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலும், பிபின் சிங் 83-வது நிமிடத்திலும், நந்தகுமார் சேகர் 90+6வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். சென்னை அணி சார்பில் இர்பான் 28-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 7-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 4-வது தோல்வியாகும். ஈஸ்ட் பெங்கால் அணிக்கு 4-வது வெற்றியாகும்.
தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.