லூதியானா,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் லூதியானாவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி. - சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி சார்பில் லால்ரின்லியானா ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னை அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
10 ஆட்டங்களில் ஆடியுள்ள பஞ்சாப் அணி 5 வெற்றி, 2 தோல்வி, 3 டிராவுடன் புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி 2 வெற்றி, 6 தோல்வி, 3 டிராவுடன் 12-வது இடத்தில் உள்ளது.