சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கனிம வள மாஃபியாக்கள் ராஜ்ஜியம் நடக்கிறதா? கொள்ளை ஆட்சியை விரட்டியடிப்போம்.
சேலம் மாநகர் ரெட்டியூர் பகுதியில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி கடத்தப்படுவது குறித்த தொலைக்காட்சி செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தினமும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது குறித்து புகார் கூறிய பின்னரும் சேலம் மாவட்ட கனிமவளத்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு.
கனிம வளங்களை பாதுகாக்கத்தானே கனிம வளத்துறை..? அல்லது கமிஷன் வாங்கிக்கொண்டு கமுக்கமாக இருக்கவா..?
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சேலம் மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை பெருகி விட்டது. மலைகள் வெட்டப்படுவதும், மண் கடத்தப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் தான் கனிம வள மாபியாக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
கனிம வளங்களை கொள்ளையடித்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்களுக்கு, துணையாக இருக்கிறது திமுக அரசு. ஏனென்றால் மணல் குவாரி, கல் குவாரி நடத்தும் பெரும்பாலானவர்கள் திமுகவினர்தான்.
மக்களை தவிர மற்ற எல்லா சமூக விரோதிகளுக்கும் திமுக ஆட்சியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.! இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்கு ஏப்ரல் மாதம்
மொத்தமாக முடிவு கட்டப்படும்.!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.