தமிழக செய்திகள்

சர்வர் கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு பெறுவதில் சிக்கல்; களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் அவதி

சுற்றலா பயணிகளை வனத்துறை சோதனை சாவடியில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிறு வார விடுமுறை என்பதால் தலையணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

இந்நிலையில், சர்வர் கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சுற்றலா பயணிகளை வனத்துறை சோதனை சாவடியில் அனுமதிக்க மறுத்துள்ளனர். விடுமுறையையொட்டி அதிகமான சுற்றலா பயணிகள் வருகை தந்த நிலையில், குளிப்பதற்கு அனுமதி கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.