தமிழக செய்திகள்

முறைகேடு செய்வதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம்; அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம்

ஆதி திராவிடர் மாணவர்களுக்கான உதவித்தொகையை முறைகேடு செய்துள்ளார்கள். அவ்வாறு ஊழல் செய்வதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிழைத்திருக்கலாம் என்று காட்டமாக கூறினர்.

சிவகங்கை மாவட்டம் பாதரக்குடியை சேர்ந்த சக்திவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி களில் தங்கி ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு வழங்க வேண் டிய ரூ.2 கோடியே 35 லட்சத்தை அதிகாரிகளும், பணியாளர்களும் கையாடல் செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

யார் காரணம்?

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், இந்த மோசடி விவகாரத்தில் சிக் கியவர்களுக்கு பதவி உயர்வு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு யார் காரணம்? என கேள்வி எழுப்பி சம்பந்தப்பட்ட அதிகாரி ஆஜராக வேண்டும் என உத் தரவிட்டு இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, "இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய் யப்பட்டு விட்டது. எனவே இந்த மனு மீது மேல்விசாரணை தேவையில்லை" என் றார்.

பிச்சை எடுத்து பிழைத்திருக்கலாம்

இதைக்கேட்ட நீதிபதிகள், 2 வருடங்களுக்கு முன்பு பதிவான வழக்கில் இப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது ஏற்புடையதல்ல என்றனர். மேலும், ஆதி திராவிடர் மாணவர்களுக்கான உதவித்தொகையை முறைகேடு செய்துள்ளார்கள். அவ்வாறு ஊழல் செய்வதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிழைத்திருக்கலாம். அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் ஊழல்வாதிகள்தான், என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கு ஒத்திவைப்பு

விசாரணை முடிவில், தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளில் ஊழல் செய்த அதிகாரிகள் எத்தனை பேர்? அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT