டி.டி.வி. தினகரன் 
தமிழக செய்திகள்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் இரட்டை இலை நிற்பதே நியாயம்: டி.டி.வி. தினகரன் பேட்டி

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

நெல்லை,

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதனால் காலியாக உள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தெரிவித்தார்.

சீமான் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அவரை எதிர்த்து வேட்பாளர்களை இறக்காமல், திமுகவும், அதிமுகவும் அவரை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, தேர்தல் தேதி அறிவித்தபிறகு அதுகுறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.

டி.டி.வி. தினகரன் பதில்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து பேசியதாவது; "கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தொகுதி அம்பாசமுத்திரம் என்பதால், அங்கு மீண்டும் இரட்டை இலை சின்னத்திலேயே வேட்பாளர் களமிறங்குவதே நியாயமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT