தமிழக செய்திகள்

திமுகவும், அதிமுகவும் இணைந்து அரசியல் செய்வது சரியானதல்ல-டிகேஎஸ் இளங்கோவன்

சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் 118 என்ற மேஜிக் நம்பரை எட்ட முடியவில்லை

திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: தற்போதைய அரசியல் சூழல் சிக்கலான நிலை தான். திமுகவும், அதிமுகவும் இணைந்து அரசியல் செய்வது சரியானதல்ல, அதிமுகவுக்கு, திமுக ஆதரவு என எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டியது தவெகவின் பொறுப்பு. விசிக, கம்யூ. கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம்” என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் 118 என்ற மேஜிக் நம்பரை எட்ட முடியவில்லை இந்த சூழலில் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக தகவல் பரவியது. இந்தத் தகவலை திமுக தரப்பு உடனடியாக மறுத்துவிட்டது.அதேசமயம், அதிமுக மறுக்கவில்லை. இன்று செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை, "எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை, தீர்க்கமான முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிசாமி 'கிங் மேக்கர்' அல்ல, அவரே 'கிங்'" என கூறியிருந்தார்.

அரசியலில் இரு துருவங்களாக உள்ள இந்த இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாகப் பரவிய தகவல், உண்மையான முயற்சிகளை அறிந்து வெளியானதா அல்லது யூகங்களாக பரவியதா, வதந்தியாக பரப்பப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த பரபரப்புக்கு நடுவே இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னரை இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.