தமிழக செய்திகள்

ராமதாசும், அன்புமணியும் சந்தித்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது- வேல்முருகன்

முன்னாள் முதல்- அமைச்சரின் தோல்வி குறித்து விஜய்யின் செயல்பாடு ஏற்புடையதல்ல

புதுச்சேரி,

புதுச்சேரியில் நடந்த திரைப்பட இயக்குனர் கவுதமன் மகள் திருமண விழாவில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் மாண்புகள் பாதுகாக்கப்பட வில்லை. கண்ணியத்துடன் சபையை நடத்த சபாநாயகர் முயற்சித்தாலும் அது நடை பெறவில்லை. திரையில் சைகைகள் செய்யலாம், சட்டசபையில் செய்த சைகையை தமிழக முதல்- அமைச்சர் தவிர்த்து இருக்க வேண்டும்.

முன்னாள் முதல்- அமைச்சரின் தோல்வி குறித்து அவருடைய செயல்பாடு ஏற்புடையதல்ல. விஜய் மனைவியை பற்றி உதயநிதி கூறியதையும் தவிர்த்திருக்க வேண்டும். பா.ம.க. தலைவர்கள் ராமதாசும், அன்புமணியும் சந்தித்துக் கொண்டது மகிழ்ச்சிக்குரிய செய்தி. சமூகநீதி பாதுகாக்கப்பட பா.ம.க. ஒருங்கிணைய வேண்டும். ஒரு குடையின் கீழ் பா.ம.க. இருக்க வேண்டும். இரு தலைவர் களும் இணைய வேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.