தமிழக செய்திகள்

பாஜகவின் ஏஜெண்ட் போல கவர்னர்கள் செயல்படுகிறார்கள் : கபில் சிபல்

தவெகவிற்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை என்று கபில் சிபல் கூறினார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தவெகவிற்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை. யாருக்கும் பெரும்பான்மை இல்லையெனில் தனிப் பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அரசுக்கான பெரும்பான்மையை சட்டப்பேரவையில் தான் பரிசோதிக்க வேண்டும்.

சட்டப்பேரவையை முடிவெடுக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும். தவெக ஆட்சியை அமைக்க கூடாது என ஆளுநர் நேரத்தை கடத்த நினைக்கிறார். கவர்னர் செய்திக்குறிப்பு வெளியிட முடியாது. பாஜகவின் ஏஜெண்ட் போல கவர்னர்கள் செயல்படுகிறார்கள். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.