தமிழக செய்திகள்

மின்வெட்டு இருப்பது உண்மைதான்: தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - திருமாவளவன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான். மின்வெட்டு பிரச்சனையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும்.

திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு. விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர். பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்

SCROLL FOR NEXT