சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு "தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை" என பாராளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை மந்திரி ராஜ்பூஷன் அளித்திருக்கும் எழுத்துப்பூர்வமான பதில் மிகவும் ஆபத்தானது; முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
தமிழ்நாட்டிற்கும் நமது விவசாயிகளுக்கும் எதிராகத்தான் மோடி அரசு எப்போதும் செயல்படுகிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம். மந்திரின் இந்தப் பதில் மூலம் பாஜகவின் தமிழ்நாட்டு எதிரான மக்கள் விரோதப்போக்கு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளையும், நமது விவசாயிகளின் நலனையும் காக்க இந்த முடிவை எதிர்த்து பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாகக் குரல் எழுப்பும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.