தமிழக செய்திகள்

“ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான்” - பிரேமலதா விஜயகாந்த்

பேசிய அவரையும் பெற்றெடுத்தது ஒரு தாய்தான் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை,

ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வழக்கு பதிந்தது சரிதான்

தேமுதிகவின் 22 ஆம் ஆண்டு கட்சி தொடக்க நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சி கொடியினை, கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது;-

“ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான்... நிர்மல் குமார் அம்மா என்ன பண்ணாங்க.? எதுக்கு அவங்க அம்மாவ பத்தி பேசுனீங்க? அடுத்தவங்க முதுகை சொரியும் முன் உங்கள் முதுகை பாருங்கள்.. பெற்ற தாய் குறித்து பொதுவெளியில் பேசும் உரிமை யாருக்கும் கிடையாது.

பிரேமலதா கண்டனம்

பேசிய அவரையும் பெற்றெடுத்தது ஒரு தாய்தான். அதற்கு எனது கடுமையான கண்டனங்கள். மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக, வாய்க்கு வந்தபடி என்னென்னவோ பேசக் கூடாது. அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்தது சரியான முடிவுதான். வார்த்தைகள் என்றைக்கும் மாறாது, வரலாறும் மாறாது.

சிம்பிளா ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்டுவேன், யாரையும் காயப்படுத்தக்கூடாதுன்னு என்னோட வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துறேன். முதல்-அமைச்சர் லண்டன் பயணத்தில் நீங்க என்னலாம் பார்த்தீங்களோ. நானும் அதையெல்லாம் பார்த்தேன்”

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT