தமிழக செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் விவகாரம்: தவெகவுக்கு பரந்தாமன் சரமாரி கேள்வி

பா.ஜ.கவில் எப்படி குற்றவாளிகள் தஞ்சம் புகுந்தார்களோ அதே போல தான் த.வெ.கவும்.. த.வெ.கவில் இருப்பவர்கள் எல்லாருமே குற்றவாளிகள் தான் என்று பரந்தாமன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கூறியதாவது: “போதைப்பொருள் விவகாரத்தில் நம்பர் ஒன் குற்றவாளியாக சந்தேகத்துக்குரியவர் அமைச்சர் சரத். அவர் தவெக நிர்வாகி. ஒரு பொருளைப் பயன்படுத்துகிறார், அது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் தவெக நிர்வாகி பெரியசாமியிடம் 100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தார்கள். ஈரோடு பவானியில் தவெக நிர்வாகி அருண் என்பவரிடம் 140 கிலோ குட்கா பிடித்தார்கள். அவர் ஏற்கனவே நாலு வருஷம் சிறையில் இருந்தவர். அவரை காவல்நிலைய பிணையில் விடுவித்தனர்.சங்ககிரியில் இருந்து 12.5 கிலோ கஞ்சாவை பூபதி என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

நாம் வீட்டு மாடியில் காய்கறிகளுக்கு மாடித் தோட்டம் வைப்போம். அதுபோல் தவெக நிர்வாகி எட்வின் ராஜ் வண்ணாரப்பேட்டையில் வீட்டு மாடியிலேயே கஞ்சா செடி வளர்த்தார்.ஆகஸ்ட் மாதம் கஞ்சாவும் மெத்தபெட்டமைன் பொருட்களையும் வைத்திருந்ததாகப் பாளையங்கோட்டையில் தவெக நிர்வாகிகள் ஆறு பேரைக் கைது செய்தனர். மதுரையில் குட்கா விவகாரத்தில் தவெக நிர்வாகி காசிநாதனைக் கைது செய்துள்ளனர்.இதற்கெல்லாம் உச்சமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை ‘குட்கா பாஸ்கர்’ என்றுதான் சொல்லுவார்கள். அவரை உங்கள் கட்சியில் இணைத்தீர்கள்.

எல்லாத்துக்கும் உச்சமாக, இன்று 137 கிலோ மெத்தபெட்டமைனை வைத்துள்ள தவெக ஒன்றிய செயலாளர் பூபாலனைக் கைது செய்திருக்கிறீர்கள். இப்போது நான் பட்டியலிட்டதெல்லாம் தவெக நிர்வாகிகள்; திமுகவின் நிர்வாகிகள் அல்ல. நீங்கள் சொல்லும் நபர்( ஜாபர்சாதிக்) தி.மு.க உறுப்பினரே இல்லை. அவர் வந்து போட்டோ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்... அவருக்கும் தி.மு.கவுக்கும் சம்மந்தமே இல்லை... என்றாவது தி.மு.க பிரமுகரை நாங்கள் காப்பாற்றியுள்ளோமா? நார்மலாகத் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய சந்தேகம் என்னவென்றால், இது டிவிகே வா அல்லது டி(D)விகே வா? தமிழக வெற்றிக் கழகமா அல்லது டிரக்ஸ் வெற்றிக் கழகமா? அப்படின்னுதான் என்னுடைய கேள்வியாக உள்ளது. பா.ஜ.கவில் எப்படி குற்றவாளிகள் தஞ்சம் புகுந்தார்களோ அதே போல தான் த.வெ.கவும்.. த.வெ.கவில் இருப்பவர்கள் எல்லாருமே குற்றவாளிகள் தான்” என்றார்.

SCROLL FOR NEXT