தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யின் தனிச்செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் - தமிழக அரசு

தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி மே 12-ல் நியமனம் செய்தது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தனி செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் பிறப்பித்துள்ளார்.

இவருக்கான பணிக்கான நிபந்தனைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும் என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் விஜய் திரையுலகில் இருந்தபோது அவருடைய மேலாளராக ஜெகதீஷ் பழனிசாமி பணியாற்றினார். விஜய் அரசியலில் இறங்கியவுடன் அவருடைய உதவியாளர் போல் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.