சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவின் முன் ஆய்வில் உள்ளது. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 3-ந்தேதி சட்டவிரோதமாக இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியானது.
இதுகுறித்து, பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உதவி எடிட்டர் பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ‘சைபர் கிரைம்' போலீசார் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.