ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் அளிக்காததால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.
இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்றதையடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.
வரும் 23 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.