சென்னை,
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியானதற்கு ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது ஆதவ் அர்ஜுனா எதைப் பார்த்தாலும் அரசியலாக்குகிறார் உங்களுக்கு ஒன்று நடந்துவிட்டால் மத்திய ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அரசியல் ஆதாயம் காண வேண்டாம் என்று ஆதவ் அர்ஜுனாவிடம் சொல்லிக்கொள்கிறேன். ஜனநாயகன் படத்தை லீக் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.