தமிழக செய்திகள்

ராயபுரம் தொகுதியில் மீண்டும் தோல்வியை தழுவிய ஜெயக்குமார்

நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த அவர், எட்டாவது முறையாக ராயபுரம் தொகுதியில் களம்கண்டார்.

சென்னை,

சென்னையில் உள்ள தொகுதிகளில் மிக முக்கியமானதாக திகழக்கூடியது ராயபுரம். கடலோர பகுதியில் அமைந்துள்ள இங்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கொடி நாட்டியது. இந்த முறை திமுக, அதிமுக, நாதக, தவெக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை போட்டியில் உள்ளனர். இது தவிர சுயேச்சைகள் பலரும் போட்டியிட கிட்டத்தட்ட ராயபுரம் தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

ராயபுரம் தொகுதியில் மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான் கானின் மகன் சுபேர்கான் திமுக வேட்பாளராக களமிறங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். மருத்துவரான இவருக்கு அந்த தொகுதியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களை சொல்லி, பெண்களிடம் தீவிரமாக பிரசாரம் செய்தார் சுபேர்கான்.

அதே போல் இங்கு அதிமுகவின் நட்சத்திர வேட்பாளரான டி. ஜெயக்குமார் களம் இறங்கினார். நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த அவர், எட்டாவது முறையாக ராயபுரம் தொகுதியில் களம்கண்டார். இடையில் இவர் மயிலாப்பூர் தொகுதிக்கு மாற உள்ளதாக தகவல்கள் வெளியான சமயத்தில், என் உயிருள்ள வரை ராயபுரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று உறுதியாக தெரிவித்தார்.

அதே மாதிரி ராயபுரம் தொகுதியில் இந்த முறையும் போட்டியிட்டார். கடந்த முறை தோல்வியை தழுவிய சமயத்திலே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது தான் காரணம் என தெரிவித்தார். தற்போது மீண்டும் பாஜக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக டி. ஜெயக்குமார் போட்டியிட்டார். மேலும், நாதகவில் இருந்து பாபு மைலன் மற்றும் தவெக சார்பாக விஜய் தாமு ஆகியோர் இந்த தொகுதியில் களம் இறங்கினர்.

இந்தநிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி அடைந்தார். ராயபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் தாமு வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக ஜெயக்குமார் பெற்ற வாக்குகள் - 16092

தவெக வேட்பாளர் விஜய் தாமு பெற்ற வாக்குகள் - 50456

திமுக வேட்பாளர் சுபேர் கான் பெற்ற வாக்குகள் - 38588