தமிழக செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து, நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

SCROLL FOR NEXT