தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழுவினர் எச்சரிக்கை

கடலோர பாதுகாப்பு குழுவினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், இன்று வழக்கம் போல பக்தர்கள் கடலில் நீராடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது கோவில் கடற்கரையில் கண்ணாடி வடிவிலான ஜெல்லி மீன்கள் காணப்பட்டன. கடலில் நீராடும் பக்தர்களின் உடலில் படும்போது கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. கடலில் குளிக்கும்போது ஜெல்லி மீன்கள் தென்பட்டால் உடனடியாக கரைக்கு வர வேண்டும் என பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடலோர பாதுகாப்பு குழுவினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT