கோப்பு படம் 
தமிழக செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கம் விலை பவுனுக்கு ரூ.152 குறைவு

சென்னையில் ஆபரண தங்கம் விலை பவுனுக்கு ரூ.152 குறைந்து ரூ.36,048க்கு இன்று விற்பனையாகிறது.

சென்னை,

ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,506க்கு இன்று விற்பனையாகிறது. இதேபோன்று தங்கம் பவுனுக்கு ரூ.152 குறைந்து ரூ.36,048க்கு விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38,928க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பவுன் ஒன்றுக்கு ரூ.36,120க்கு விற்பனையான தங்கம் நேற்று முன்தினம் ரூ.36,200 ஆக அதிகரித்தது. நேற்றும் இதே விலையே தொடர்ந்தது.

வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.73.90க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,900 ஆக உள்ளது.