தமிழக செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 216 ரூபாய் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரமாக இருந்தது.

அதனை தொடர்ந்து தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து ஜூலை 31 ஆம் தேது ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. மேலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ஒரு சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,351 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 42,808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்