தமிழக செய்திகள்

விழுப்புரம் அருகே சமையல்காரர் வீட்டில் நகை, பணம் திருட்டு

விழுப்புரம் அருகே சமையல்காரர் வீட்டில் நகை, பணம் திருடு போனது.

விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவர் சுப நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கப்பியாம்புலியூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை அவர், தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பவுன் எடையுள்ள 2 மோதிரங்கள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சேகர் வெளியில் சென்றிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுப்போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

இதுகுறித்து அவர், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT