தமிழக செய்திகள்

பழனி இடும்பன் கோவிலில் நகை திருட்டு... தற்காலிக பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது!

கடந்த ஆண்டு நிரஞ்சனா தற்காலிக ஊழியராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

பழனி,

பழனியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன் கோவிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் 20.5 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி நகைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடுபோனது.

நகை திருட்டு

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், ஒரு மாதமாக துப்பு துலங்காமல் இருந்த நகை திருட்டு வழக்கில், பழனி இடும்பன் கோவிலில் தற்காலிக ஊழியராக வேலை செய்த பாப்பம்பட்டி நிரஞ்சனா (வயது 26), அவரது நண்பரான நெய்க்காரப்பட்டி பிரபாகரன் (35) ஆகி யோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது, கடந்த ஆண்டு நிரஞ்சனா தற்காலிக ஊழியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதையடுத்து நிரஞ்சனா கோவில் நகையை திருடி, தனது ஆண் நண்பர் பிரபாகரனுடன் சேர்ந்து அதை உருக்கி விற்று, அந்த பணத்தில் இருவரும் ஆடம்பர பொருட்கள், சுற்றுலா என சொகுசாக வாழ்ந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT