தமிழக செய்திகள்

தேனியில் வேலைவாய்ப்பு முகாம்: நியமன ஆணை வழங்கிய கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா

இளைஞர்கள் கிடைத்த வேலைவாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜெகநாத் மிஸ்ரா அறிவுறுத்தினார்.

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அரசு உதவி பெறும் பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இந்த முகாமில் பங்கேற்றனர்.

முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் வைத்தியநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, இளைஞர்கள் கிடைத்த வேலைவாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து முயற்சி செய்து அரசு வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT