தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்காமல் உள்ளார். இதற்கு விசிக, மதிமுக சிபிஎம் என பல்வேறு கட்சியினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தவெகவுக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சி நடைபெறுகிறது என்று தவெக நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் இதை எல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஓபிஎஸ்-ஐ ஏன் எடப்பாடி பழனிசாமி வெளியே அனுப்பினார்கள். இப்போது ஏன் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார் என்று ஊருக்கே தெரியும். தமிழக மக்கள் இந்த நிகழ்வை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மற்ற தொகுதியில் ஜெயித்தவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்கள் இவர்களுக்கா ஓட்டு போட்டோமா என்று சிந்திக்க வேண்டும். எந்தளவிற்கு மக்களுடைய தீர்ப்பை நீர்த்துப் போக செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த திட்டத்தை சிலர் தடுத்திருக்கலாம், ஆனால், திமுகவும் அதிமுகவும் முயற்சி செய்தது உண்மை தான். அது முற்றிலும் மக்களுக்கு எதிரான செயல். மக்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள் என்றார்.