தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. கைது: அ.தி.மு.க.-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - எடப்பாடி பழனிசாமி

அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி பெற்றுத் தருவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

பாலியல் SIR

இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. கைது, அ.தி.மு.க.-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அ.இ.அ.தி.மு.க.-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

அருள் விக்னேஷ் என்ற த.வெ.க.-வின் பாலியல் SIR கைது!

நீதி பெற்றுத் தருவோம்

தமிழக முதல்-அமைச்சர் அவர்களுக்கு..

Just a Reminder-

நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !!

இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!

இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT