தமிழக செய்திகள்

ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமலின் பணிகள் சிறக்கட்டும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

கமல்ஹாசனை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

இன்று பிறந்த நாள் காணும் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் கமல்ஹாசன் சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம். இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு, அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT