தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா

காஞ்சீபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.

காஞ்சீபுரம் மேட்டு தெரு அருகே மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி தரும் புகழ்பெற்ற கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்ஆடிப்பூரத்தையொட்டி நேற்று கருக்கினில் அமர்ந்தவள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர்கள், வளையல், எலுமிச்சம் பழங்களால் செய்யப்பட்ட மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் கருவறை முன்பு புளியோதரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், உள்ளிட்டவற்றை படைத்து சிறப்பு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT