தமிழக செய்திகள்

காஞ்சீபுரம்: 1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை

காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளைகேட், நத்தப்பேட்டை, களக்காட்டூர், வைய்யாவூர், வாலாஜாபாத், தாமல், பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், நகரில் வெப்பம் சற்று தணிந்தது. மழையால், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.