சென்னை,
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன்படி சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையே ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரெயிலாக இயக்கப்படும் (வண்டி எண்: 06007) சென்னை எழும்பூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) மாலை 4.10-க்கு புறப்படும் இந்த ரெயில் திருச்சிக்கு இரவு 9.25 மணிக்கு வந்து 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்: 06008) திருச்செந்தூரில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணிக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரெயிலாக புறப்படும். இந்த ரெயில் திருச்சிக்கு மறுநாள் காலை 6 மணிக்கு வந்து 6.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
இதேபோல் திருநெல்வேலி-தாம்பரம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06010) திருநெல்வேலியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு வந்து 3.50-க்கு புறப்பட்டு காலை 9.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக தாம்பரம்- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5.15 மணிக்கு வந்து 5.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40-க்கு திருநெல்வேலி சென்றடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.