கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணத்தைச் சேர்ந்த மீனவர் சுரேன்-வின்சி தம்பதியின் 1 வயது பெண் குழந்தை ஹெலைனா. சம்பவத்தன்று வீட்டில் தாய் வின்சி குழந்தைக்கு உணவளித்துவிட்டு, பாத்திரங்களை கழுவச் சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. தேடிப் பார்த்ததில், குளியலறை வாளி தண்ணீரில் குழந்தை தலைகீழாக விழுந்து கிடந்தது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.