கன்னியாகுமரி,
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 21 முதல் 23, 2026 வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். இந்த நாட்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த வினு என்பவர் மது பானங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் பரக்குன்று அருகே தெற்றிக்குழி பகுதியில் தனி பிரவு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வினு என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அங்கு சட்ட விரோதமாக மதுபானங்கள பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 306 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பளுகல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தப்பிச் சென்ற வினுவை போலீசார் தேடி வருகின்றனர்.