கன்னியாகுமரி,
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மீன்பிடி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெல்சன் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டிற்கு விளையாட வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார், ஜெல்சனை விசாரணை செய்த போது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.