கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் இருந்து அசாமின் திப்ருகார் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (ஆகஸ்ட் 11) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து நாளை மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டிய (ரெயில் எண் 22503) கன்னியாகுமரி - திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ந்தேதி இயக்கப்பட்டிருக்க வேண்டிய இணைப்பு ரெயிலான (ரெயில் எண் 22504) ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதனைத் தொடர்ந்து நாளை இயக்கப்பட வேண்டிய கன்னியாகுமரி - திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளைய பயணத்துக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.