மனைவி மீது வழக்கு 
தமிழக செய்திகள்

காரைக்கால்: கணவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்த மனைவி மீது வழக்கு

கடும் ஆத்திரத்தில் இருந்த ஜோதி, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் செல்வம் மீது வீட்டில் இருந்த டீசலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

காரைக்கால்,

காரைக்கால் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது அவரது மனைவியே டீசல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த சுரக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 46). கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். செல்வத்திற்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கணவர் மீது டீசல் ஊற்றி தீ வைப்பு

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றிக்கிழமை) இரவு, செல்வம் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மொபைல் போன் சார்ஜரை எங்கே என்று கேட்டு மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தகராறு முடிந்து செல்வம் வீட்டில் தூங்கச் சென்றுள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ஜோதி, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் செல்வம் மீது வீட்டில் இருந்த டீசலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை-வழக்குப்பதிவு

செல்வத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு காரைக்கால் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவரை தீயிட்டு கொளுத்த முயன்ற மனைவி ஜோதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT