சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், தாம்பரம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான ம.கரிகாலன் இன்று முதல் அ.ம.மு.க. பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அ.ம.மு.க. பொருளாளருக்கு கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.