தமிழக செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கர்நாடக துணை முதல் மந்திரி டிகே சிவக்குமார் தரிசனம்

நேற்றைய தினம் தமிழக முதல்வருக்கு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன் என்று டிகே சிவக்குமார் கூறினார்.

திருச்செந்தூர்,

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகை தந்தார். கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் குடும்பத்துடன் கோவிலுக்குள் சென்று சுவாமி மூலவர்,சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்து வெளியே வந்தார்.

வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :-இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு முருகப் பெருமானை தரிசனம் செய்ய வருகை தந்ததாக தெரிவித்தார். இந்த முருகப்பெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர் என கூறினார். மேலும் அவர் கூறுகையில் நேற்றைய தினம் தமிழக முதல்வருக்கு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் முடித்து விட்டது. தொடர்ந்து ஆட்சி நடைபெற முருகன் அருள் புரிவான் என்று அவர் தெரிவித்தார்” என்றார்.