தமிழக செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழா: மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்

கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக நெய் கொள்முதல் செய்யப்படும்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றுவதற்காக ஆவின் நிறுவனத்தில் இருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதா கும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்துவார்கள். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக நெய் கொள்முதல் செய்யப்படும். பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தினால் அவர்கள் பெயரில் மகா தீபத்திற்கு நெய் வழங்கப்படும்.

இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இவ்விழா வின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 24-ந் தேதி ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

4,500 கிலோ நெய்

மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணா மலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் 4,500 கிலோ முதல்தர நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 15 கிலோ எடையுள்ள 300 டின்களில் ஆவின் நெய் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் பகுதியில் உள்ள திட்டி வாசல் அருகில் வைக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT