தமிழக செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா: கோயம்பேட்டில் வரத்து குறைவால் பூக்கள் விலை அதிகரிப்பு

கோயம்பேட்டில் வரத்து குறைவால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் திண்டிவனம், திருவண்ணாமலை, திருத் தணி, ஒசூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு வகையிலான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

தற்போது பரவலாகப் பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. வரத்து இல்லாததாலும், இன்று கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் சபரிமலை சீசன் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்ததாலும் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கிலோ ரூ.700 வரை விற்கப்பட்ட மல்லிகைப் பூ. தற்போது 2 மடங்குக்கு விலை உயர்ந்து கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மல்லி பூ ஒரு கிலோ ரூ.2,100 முதல் ரூ.2,400 வரையிலும், முல்லை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையிலும், கனகாம்பரம் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையிலும், பன்னீர் ரோஜா ரூ.140, சாக்லெட் ரோஜா ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி பூ ரூ.40 முதல் ரூ.100 வரையில் விற்பனை செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT