தமிழக செய்திகள்

கரூர்: டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல்; 20 கடைகள் அடைப்பு

இதனை தொடர்ந்து, 20 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதன் ஊழியர்கள், மண்டல மேலாளர் அலுவலகத்தில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்ததன் தொடர்ச்சியாக 20 கடைகள் அடைக்கப்பட்டன.

கரூர் மேலப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தகவல் மற்ற டாஸ்மாக் கடைகளுக்கு பரவியது.

இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 20 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதன் ஊழியர்கள், மண்டல மேலாளர் அலுவலகத்தில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஊழியர்களுடன் மேலாளர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எனினும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT