கரூர்,
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.
கரூர் மாவட்டம் குளித்தலை குமாரமங்கலம் அருகே சென்றபோது நெடுஞ்சாலையில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் 2 லாரிகளின் 2 டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.