கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அமைச்சர் அதவ் அர்ஜுனாவின் பொறுப்பற்ற, தவறான, தீய நோக்கம் கொண்ட மற்றும் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்’ எனக் கோரப்பட்டுள்ளது. மேலும் ‘ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, திமுக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல் துறைக்கு எதிராக ஒரு பொய்யான கதையை உருவாக்குவதோடு, ஒரே நேரத்தில் பொதுமக்களின் கருத்தை திசை திருப்பவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி நடத்தப்படும் ஒரு விசாரணையில் தலையிடவும் முயல்கிறது. கரூர் விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜுனா, விஜய் உள்ளிட்டோர் பேச தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் நேற்று நடந்த விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்தனர். விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- இந்த ஆட்சியை கவிழ்க்க முயன்றால் மொத்த தமிழ்நாடும் தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். 234 தொகுதிகளிலும் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள்.தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இருக்கிறார்கள். இந்த உள் ளாட்சி தேர்தலிலோ அல்லது விரைவிலோ அவர்கள் தங்களது கூட்ட ணியை அறிவிப்பார்கள். அதற்கு பா.ஜனதாவும் அவர்களுக்கு துணையாக நிற்கும். கரூர் சம்பவத்திற்கு அவர்கள் (அதாவது தி.மு.க.வினர்) பதில் சொல்லியே ஆக வேண்டும்.
சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார். அப்போது அவர் கண்ணீர் வடித்தார். அந்த கண்ணீர் கரூர் மக்களின் கண்ணீர். அந்த பாவம் உங்களை சும்மா விடாது. தி.மு.க.வுக்கு கடைசி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். இனி உங்கள் குடும்பம் லண்டனில் போய் செட்டில் ஆக வேண்டியது தான். கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது; அதை முடிக்காமல் விடமாட்டோம்"இவ்வாறு அவர் பேசினார்.