சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப் டம்பர் மாதம் 27-ந் தேதி கரூருக்கு சுற்றுப்பயணம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணை நடத்துகிறார்கள். சம்பவ இடத்தில் கள ஆய்வும் நடத்தப்பட்டது.
சம்பவத்துக்கு காரணம், பாதுகாப்பு குறைபாடுகள் என த.வெ.க. தரப்பில் சொல்லப்பட்டதால் காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து, கட்சியின் தலைவரான விஜய்க்கும் 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த சம்மனில் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில், டெல்லிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்கப்பட்டது.
நெருங்குவதால் அதுகுறித்த பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், அதில் இருந்து விலகி, விசாரணைக்காக டெல்லிக்கு வருவது சிரமமான காரியம் என்றும் கூறியுள்ள விஜய், டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் எங்காவது விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், கரூர் வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற 15-ம் தேதி நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. பணிகள் இருப்பதாகக் கூறி மாற்று தேதி கேட்டிருந்த நிலையில் புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் ஆஜராக அனுமதி கேட்டதாகவும், ஆனால் அவர்கள் டெல்லிக்கே வரக் கூறியிருப்பதாகவும் அக்கட்சி நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.