கரூர்,
கரூர் மாவட்டத்தில் மனைவியை கொன்ற வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு பெரியகுளத்துபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). இவரது மனைவி பழனியம்மாள்(30). இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி மனைவி பழனியம்மாளை காரில் அழைத்துச் சென்று, கொலை செய்து அவரது உடலை பெட்ரோல் ஊற்றி சிவக்குமார் எரித்து விட்டார்.
இந்த கொலை வழக்கின் விசாரணை கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் சிவக்குமாருக்கு 3 ஆயுள் தண்டனைகள் விதித்து கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் தீர்ப்பு வழங்கினார்.