கோவை,
காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு ஈரோடு வழியாக கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை பனாரஸ் (வண்டி எண். 06047) சிறப்பு ரெயில் கோவையில் இருந்து வருகிற 29-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்படுகிறது. ஈரோட்டுக்கு இரவு 7.35 மணிக்கு வந்து, 7.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பனாரசுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி இரவு 8 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக பனாரஸ் - கோவை சிறப்பு ரெயில் (06048) 5-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படுகிறது. ஈரோட்டுக்கு 7-ந் தேதி இரவு 9.25 மணிக்கு வரும் ரெயில், 9.30 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 11.55 மணிக்கு சென்றடைகிறது.
இதேபோல் கோவை - பனாரஸ் (06053) மற்றொரு சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு, பனாரசுக்கு 7-ந் தேதி இரவு 8 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக பனாரஸ் கோவை (06054) சிறப்பு ரெயில் 11-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு 13-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்றடைகிறது.
இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.