தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சிறுமி, ஓட்டுநர் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் எதிர்புற சாலையில் தறிக்கெட்டு ஓடியதால் அடுத்தடுத்து இரு கார்கள் மோதி விபத்து.

விபத்தில் 4 வயது சிறுமி, ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 13க்கும் மேற்பட்டோர் கால்முறிவு, கைமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. தாஹிரா, சோளிங்கர் எம்.எல்.ஏ. மருத்துவர் கபில் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.