தமிழக செய்திகள்

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்; முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்

தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் திகழ்வதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

சென்னை,

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்மொழி உள்ளவரை அவரது புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

புகழ் வணக்கம்

தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசனுக்கு எனது புகழ் வணக்கங்கள்.

மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன்.

காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் திகழ்கின்றன.

தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.